Friday, October 28, 2011அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதி-பிரதிநிதிகளுக்கெதிராக புலிகளின் ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்!
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 22 வது பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்துக்கொள்ளும் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதிநிதிகளுக்கு எதிரான இன்று (28) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் இலவசமாக விமான பயண சீட்டுகள் மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கி வருவதாக தெரியவந்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
அடுத்த பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெற உள்ள நிலையில், அந்த தீர்மானத்தை மாற்ற, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாரிய செயற்பாடுகளில் ஈடுபட்டு, பெரும் அழுத்தங்களை கொடுக்க புலிகளின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாக அவுஸ்திரேலியாவில் உள்ள சிங்கள அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை பேர்த் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு பொருத்தமான பதிலை வழங்க தமது அமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி உட்பட பிரதிநிதிகளுக்கு ஆதரவாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் சிங்கள அமைப்பின் பிரதநிதி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment