
Wednesday, October 26, 2011அவூஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கும் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவூக்கும் மற்றும் இலங்கை தூதுக்குழுவினருக்கும் அவூஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் மாபெரும் வரவேற்பளித்தனர்.
வெஸ்டேன் அவூஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் வித்ரோப் கூடத்தில் இந்த வரவேற்பு நேற்று இடம்பெற்றது.
சிறுவர்கள் இலங்கையின் தேசிய கீதம் பாடினர்.அங்கு கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார்
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை உண்மைகளை வெளிப்படுத்தும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான நடவடிக்கைகள் பற்றிய யதார்த்தங்களை விரைவில் அறிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் சர்வதேச சமூகத்தை பிழையாக வழிநடத்துவதில் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அதன் மூலம் நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இலங்கையர்கள் தங்களது பிள்ளைகளுக்கு சிங்களத்தையும் தமிழையும் கற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கை சமூகத்தினரை சந்தித்து உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment