Wednesday, October 26, 2011

சனல்4 ஊடகம் தொடர்பான கருத்துக்களுக்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது!

Wednesday, October 26, 2011
சனல்4 ஊடகம் தொடர்பான கருத்துக்களுக்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

சனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படமானது ஊடக ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படவில்லை என அந்நாட்டு தொடர்பாடல் கட்டுப்பாட்டு அதிகாரசபை ஒப்கொம் அறிவித்திருந்தது.

சனல்4 ஊடகம் ஊடக ஒழுக்க விதிகளை எந்த வகையிலும் மீறிச் செயற்படவில்லை என ஒப்கொம் குறிப்பிட்டிருந்தது.

பிரித்தானிய ஊடக கட்டுப்பாட்டு அதிகாரசபை அதன் தரத்தைப் பேணத் தவறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த ஆவணப்படமானது திரிபுபடுத்தப்படாதது என எவ்வாறு ஒப்கொம் அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனல்4 ஆவணப்படமானது ஒரு பக்சச் சார்பான பிரச்சாரமாகவே கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஒப்கொம, செனல்4 ஊடக நிறுவனத்தின் நோக்கங்களையும் புரிந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, ஒப்கொம் நிறுவனத்தின் இந்தத் தீர்ப்பானது ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment