Wednesday, October 26, 2011

இரண்டாவது நாளாக தொடரும் கைதிகள் போராட்டம்

Wednesday, October 26, 2011
மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரை மீதேறி கைதிகள் சிலர் மேற்கொண்ட பேராட்டம் தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.

சுமார் 20 கைதிகள் சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சுலோகங்களையும் ஏந்தியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இது குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ கொடிப்பிலியிடம் நியுஸ்பெஸ்ட் வினவியது.

மட்டக்களப்பு சிறைச்சாலையின் வைத்தியர் ஒருவரை மாற்றுமாறு கோரிக்கை முன்வைத்தே கைதிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

கைதிகள் கோரிக்கை தொர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment