Wednesday, October 26, 2011

இலங்கை அகதி அவுஸ்திரேலியாவில் தற்கொலை!

Wednesday, October 26, 2011
அவுஸ்திரேலியாவின், சிட்னியில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளிக்கு தான் விடுதலை செய்யப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகவே அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அறிந்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பபட்ட போதும் அது கைகூடவில்லை என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

30 வயதான குறித்த நபர் தனது புகலிடக்கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைப்பதை எதிர்பார்த்து இருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக முகாமில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதியான குறித்த நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அகதிகள் செயற்பாடுகளுக்கான அமைப்பின் பேச்சாளர் அயன் றின்டோல் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய இறப்பு பற்றி அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவருக்கு இளைய சகோதரர் ஒருவர் இலங்கையில் இருப்பதாகவும் மேலும் குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment