Wednesday, October 26, 2011பொது மக்களுக்கு உச்சமான சேவையை வழங்க வேண்டியது காவற்துறையினரின் கடமை என, காவற்துறை மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கைதுகளின் போது, ஒத்துழைப்பு வழங்கிய, காவற்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே, காவற்துறை மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, 631 பேருக்கு இடையில், ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான தொகை சன்மானமாக பகிரப்பட்டது.
இதில், காவற்துறையினருக்கு ஒற்றர்களாக செயற்பட்ட 24 பேரும் கௌரவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment