Wednesday, October 26, 2011

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைந்தனர்!

Wednesday, October 26, 2011
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகத்தில் இணைக்கும் முப்பதாவது வைபவம் நேற்று (25) கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஸ்ண மண்டபத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தலைமையில் நடைபெற்றது.

புனர் வாழ்வூ பெற்ற 367 பேரை சமூகத்தில் இணைக்கும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் டீ.எம். ஜயரத்ன கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்ற இவ்வைபவத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர அமைச்சின் செயலாளர் திஸாநயக்க புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து பிரதமர் உரைநிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மேல்மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அலவி மௌலானா வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் உள்ளிட்ட பல உயர்அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment