Monday, October 10, 2011இந்திய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை தமிழக மீனவர்கள் கடைபிடிக்க வேண்டும்
அதுவரையில் இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் சங்கம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது
இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் உள்;ள சில மீனவர்கள், அராங்கத்தின் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றனர்
அது இந்திய இலங்கை கடல் பகுதியில் உள்ள கடல் வளத்தை முற்றாக அழித்துவிடும் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் போஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்தியத் தரப்பினர், தமது மீனவர்களிடம் உள்ள குறைபாடுகளை சீர்செய்யவேண்டும்
அதுவரையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எந்த வகையிலும் பலனளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர், இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment