Sunday, October 30, 2011இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு பிராஜவுரிமை வழங்கப்படும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த அதிக அளவிலான இலங்கை அகதிகள் நாடு திரும்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு நாடு திரும்பும் சகலருக்கும் பிராஜாவுரிமை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 – 30 ஆண்டுகளாக குறித்த இலங்கையர்கள் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் சிலர் இந்திய ஆவணங்களைப் பயன்படுத்தி வருவதாகவும், நாடு திரும்பும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனவும், சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அகதி முகாம்களில் பிறந்த இலங்கைக் குழந்தைகளுக்கு இலங்கை பிராஜாவுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சென்ற பலர் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment