Sunday, October 30, 2011
ஒன்பது நாடுகளில் செயற்பட்டு வரும், புலிகளின் சர்வதேச வலையமைப்பின் 20 செயற்பாட்டாளர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள, மேலதிக இராணுவ புலனாய்வு பிரிவுகளை ஆரம்பிக்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
புலிகளின் இந்த சர்வதேச செயற்பாட்டாளர்கள் தொடர்பான விபரங்களை, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, முள்ளிவாய்க்காலில் இருந்த பதுங்கு குழியொன்றில் இருந்து கண்டிப்பிடித்திருந்தார். இந்த நபர்கள், கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிடன், நோர்வே, சுவிஸர்லாந்து போன்ற நாடுகளில் செயற்பட்டு வருவதாக சர்வதேச இராணுவ புலனாய்வு தலைவர்கள் கண்டறிந்துள்ளனர்.
புலிகளின் இந்த சர்வதேச செயற்பாட்டார்கள், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை ஆயுதங்களை மீண்டும் கையில் எடுக்குமாறு ரகசிய தகவல்களை அனுப்பியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவுகள், சர்வதேசத்தில் இருந்து செயற்படும் விடுதலைப்புலி தலைவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை புலிகளின் இந்த 20 சர்வதேச செயற்பாட்டாளர்கள் இலங்கை செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment