Sunday, October 09, 2011
உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேறுகள் அனைத்தும் வெளியான நிலையில், தற்போது விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், சில மன்றங்களுக்கான விருப்பு வாக்குகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
கண்டி மாநகர சபையினை வெற்றி கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதிக விருப்பு வாக்குகளை, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் மகன் மகேந்திர ரத்வத்த பெற்றுள்ளார்.
இவர் 6 ஆயிரத்து 948 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில், அதிக விருப்பு வாக்குகளை கண்டி தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமே நிரஞ்சன் விஜேரத்ன பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர் பெற்ற விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 290 ஆகும்.
குருநாகல் மா நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களது விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, அந்த மா நகர சபையை வெற்றிகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வர் அநுராதா காமினி பெரமுன ஆகக் கூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர் பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 805 ஆகும் நிலையில், முன்னாள் முதல்வர் நிமல் சந்திரசிரி 4 ஆயிரத்து 892 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதனிடையே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக அதிக விருப்பு வாக்குகளை, வருண பிரேமரட்ன பெற்றுள்ளார்.
இவர் பெற்றுக் கொண்ட வாக்குகள் ஆயிரத்து தொளாயிரத்து 78 என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment