Thursday, October 13, 2011
கொழும்பை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் அதனை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வரவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு, மாநகர சபைத் தேர்தலில் தமது கட்சி தோல்வியடைந்ததற்காக நாம் அபிவிருத்தி அதிகார சபையைத் தோற்றுவிக்கவுள்ளோம் என்று எவரும் கருதக் கூடாது. அந்த நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதல்ல. கொழும்பின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தினால் கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment