Thursday, October 13, 2011
சட்டவிரோத ஆயுதங்களக் களையும் நடவடிக்கை இன்று முதல் அமுலுக்குக் கொண்டுவரப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
முல்லேரியா துப்பாக்கிச சூட்டுச் சம்பவம் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கம் வகையில் தெரிவித்த அமைச்சர் தொடர்ந்து கூறுகையில்.
கடந்த 30 வருடகாலமாக நாட்டில் துப்பாக்கி கலாசாரம் நிலவி வருகின்றது. பலதரப்பட்ட அரசாங்கங்களின் ஆடசிக் காலங்களின் போது பலதரப்பட்ட காலக் கட்டங்களில் நாட்டில் அசாதாரன சு+ழ்நிலை நிலவியது.
இதன்போது பெரும் எண்ணிக்கையிலான அமைச்சர்கள் உட்பட அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் படுகொலை செய்யப்பாட்டனர். இதன்காரணமாக தமக்குத் தாமே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெண்டிய நிர்ப்பந்தம் அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்டது.
அவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல தரப்பைச் சேர்ந்தவர்களும் செர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த மாற்றம் மோசமான சம்பவங்களை இடம்பெறச் செய்யவூம் வழி வகுத்தன. அதற்கு ஏதுவாக அரசியல் கலாசார மாற்றம் தேர்தல் முறை மாற்றம் போன்றவை அமைந்தன.
முல்லேரியா சம்பவத்தை மிகவும் மோசமான ஒரு சம்பவமாகக் கருதி அது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
நாட்டில் தற்போது அமைதியுடனான சமாதான சூழல் நிலவுகின்றது. துப்பாக்கிக் கலாசாரத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
நாட்டு மக்களுக்கு நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்க அரசாங்கம் சட்ட விரோத ஆயுதங்களைக் களைவதற்காக விஷேட நடவடிக்கை ஒன்றை உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பல குழுக்களையும் அரசாங்கம் அமைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment