Thursday, October 13, 2011
இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் பிரித்தானிய சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படம் ஐரோப்பிய பாராளுமன்றில் திரையிடப்பட்டமை உள்நோக்கமுடைய திட்டமிட்ட செயல் என பிரஸல்சில் உள்ள இலங்கை தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நியமித்துள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் இணைந்து நேற்று சனல் 4 ஆவணப்படத்தை ஐரோப்பிய பாராளுமன்றில் திரையிட்டனர்.
இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்த இக்குழுவினருக்கு உள்ள அவசரநிலை இதன்மூலம் வெளிப்படுவதாக பிரஸல்ஸ் தூதுவர் தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவால் வெளியிடப்படவுள்ள அறிக்கைக்கு பதிலளிக்க பயந்தே சர்வதேச நிறுவனங்கள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment