Friday, October 28, 2011
அரசியல் பிரதிநிதிகளுடன் அமெரி்க்க அரசாங்கம் வழமையாக முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளின் ஒரு கட்டமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பும் அமைகிறது என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் உள்ளிட்ட அமெரிக்க அரசாங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவிக்கிறது.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்குமிடையே நேற்றைய தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, இதுவரை நடந்த சந்திப்புக்கள் மிகவும் திருப்தியானதாகவும் பயன்தரக் கூடியதாகவும் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசப்பட்ட விடயங்கள் குறித்து நாளை அறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

No comments:
Post a Comment