Friday, October 28, 2011
பொதுநலவாய நாடுகளின் 22ஆவது அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல பிரமுகர்களை சந்தித்துள்ளார்.
இந்த நிலையில், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, சிங்கப்பூர் பிரதமர் லீ அசீன் லுங்க் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்புக்களின் போது இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2013ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க பங்களாதேஷ் பிரதமர் இணக்கம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சிங்கப்பூர் பிரதமருடன், சர்வதேச வர்த்தக நடவடிக்கை மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று ஆரம்பமான பொதுநலவாய நாடுகளின் 22 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டின் நினைவாக மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரச தலைவர்களினதும் பாரியார்கள் ஒன்றிணைந்து படம் எடுத்துக்கொண்டனர்
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் படத்தில் காணப்படுகிறார்.

No comments:
Post a Comment