Saturday, October 29, 2011
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் மூலம் 50 ஆயிரத்து 70 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, சுங்க திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வருடத்தின் முதல் பத்து மாத காலப்பகுதியில் 23 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள், 18 கிலோகிராம் ஹஜீஷ் போதைப்பொருள் மற்றும் 10 கிலோவிற்கும் அதிகமான கொக்கேயின் போதைப்பொருள் ஆகியன கைப்பபற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதுவரையில் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் மூவாயிரத்து 800யிற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

No comments:
Post a Comment