Saturday, October 29, 2011அவைரும் ஏற்றுக்கொள்ளும் அதிகாரப் பகிர்விற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதனை அடிப்படையாக கொண்ட எந்தவொரு திட்டத்தினையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை ஐக்கிய தேசிய கட்சி வழங்குமென அவர் தெரிவிக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சர்வதேச நடவடிக்கைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 33 அமர்வில் பங்கேற்கும் முகமாக கொழும்பிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்க்கட்சி தலைவர் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்துள்ளது.
உலகிலுள்ள அனைத்து பாராளுமன்றங்களுக்கும் இதனை விட அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே தனதும் தமது கட்சியினதும் எண்ணமென ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கிறார்.
நாட்டின் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தினூடாக தீர்வினைப் பெறவேண்டிய அவசியம் தமக்குள்ளதாகவும் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அரசாங்கமும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட அவர், இந்த வருட இறுதிக்குள்ளாவது அதற்கான உறுதியான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கிறார்.
அரசாங்கம் தமது வார்த்தை அளவில் இதனை வரையறுக்காமல் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அவற்றை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையில் தமிழ் கூட்டமைப்பிற்கான அதிகாரப் பகிர்வினை வழங்குவதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமென ரணில் விகரமசிங்க மேலும் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment