Friday, October 28, 2011அமெரிக்க, வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறவுள்ள தீபாவளி கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஓபாமா கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதன மூலம் தீபாவளியை கொண்டாடிய முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற சிறப்பை பரக் ஒபாமா பெற்றுக்கொண்டார்.
எனினும் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா கலந்துகொண்டார்.
ஜனாதிபதி பரக் ஒபாமா இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த தமது கன்னி விஜயத்தின்போது இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டிருந்தார்.
No comments:
Post a Comment