Friday, October 28, 2011
அரசாங்கம் போலியான அபிவிருத்தியை காட்டுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மாத்தறையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்து வந்த பாதையும் பயணிக்க வேண்டிய பாதையும் என்ற தொனிப்பொருளில் இந்த கருத்தரங்கு இடம்பெற்றது.
அபிவிருத்தி என்று கூறப்படுகின்ற போதிலும் அது அபிவிருத்தி அல்ல எனவும், நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டு வருவதாயின் அது வெளிப்படைத் தன்மையுடையதாக அமைய வேண்டும் என்றும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி எனில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் வீதிகள் கார்பட் இடுவதால் மட்டும் நாடு அபிவிருத்தி அடைவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கடன் சுமை அதிகரித்துச் செல்வதாக குறிப்பிட்ட அவர் இத்தகைய வித்தைகளால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லையென கூறினார்.
மக்களுக்கு ஏதேனும் ஒன்றைக் காட்டி ஏமாற்றுவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாக கூறிய அவர், மக்கள் ஏமாறுவதும் நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment