Friday, October 28, 2011
இலங்கை - சீன நட்புறவுச் சங்கத்தினால் வவுனியா, மதவைக்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படடுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குறித்த பிரதேசத்தின் மூன்று பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்ச ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு சிரமங்ளுக்கு மத்தியில் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மாணவர்களுக்கு இதன்போது பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான சீன தூதுவர் குறிப்பிட்டார்.
வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் சுமெத பெரேரா, வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

No comments:
Post a Comment