Sunday, October 09, 2011
நல்லாட்சியை ஏற்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென மீண்டும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
2013ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளதாகவும், இதனால் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டினை ஒழுங்கு செய்துள்ள நாடு என்ற ரீதியில் இலங்கை அமைப்பின் முதன்மை கொள்கைகளை நிலைநாட்ட கடமைப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏதேனும் மாற்றங்களை எதிர்பார்ப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment