டெல்லி உட்பட நாட்டின் முக்கிய பெருநகரங்களின் பாதுகாப்புக்காக மலைப் பகுதிகளில் அதிநவீன ரேடார்கள் அமைக்கப்பட்டு, அருகே போர் விமானங்கள் நிறுத்தப்படும்’’ என்று விமானப்படை தளபதி என்.ஏ.கே பிரவ்னி கூறினார்.
டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதில், விமான சாகசங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக, பெண் பைலட்களின் சாகசம், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இவ் விழாவில் விமானப்படை தளபதி பிரவ்னி கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சமீப காலமாக, விமானப்படையை சேர்ந்த மிக்&21 போர் விமானங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இந்த ஆண்டில் இதுவரை 6 போர் விமானங்கள் விழுந்து நொறுங்கி உள்ளன. அவற்றில் 4 போர் விமானங்கள் மிக்&21 ரக த்தை சேர்ந்தவை. அனுபவம் குறைந்த இளம் பைலட்களால்தான் பெரும்பாலான விபத்துகள் நடந்துள்ளன. கடந்த 1960ம் ஆண்டில் இருந்து விமானப்படையில் 976 மிக்&21 போர் விமானங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இவற்றில் பாதிக் கும் மேற்பட்ட விமானங்கள் விபத்தினால் இழக்கப்பட்டுள்ளன.
டெல்லி உட்பட நாட்டின் பெருநகரங்களுக்கு திடீரென ஆபத்து ஏதாவது ஏற்பட்டால் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை விமானப்படை மேற்கொண்டுள்ளது.
இந்திய வான்வெளி முழுவதையும் முழுமையாக கண்காணிக்கும் வகையில், உயர்ந்த மலைகளின் மீது அதிநவீன ரேடார்கள் அமைக்கப்படும். மேலும், பெருநகரங்களின் மீதான ஏவுகணை தாக்குதலை முன்கூட்டியே தெரிவிக்கும் கருவிகளும் நிறுவப்பட்டு, போர் விமானங்களும் நிறுத்தப்படும். 2014ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். வான்வெளி கண்காணிப்பில் தற்போது உள்ள சிறிய இடைவெளியை கூட இதன் மூலம் தவிர்க்க முடியும். எதிரிகளின் போர் விமானங்களை நடுவானில் வழிமறித்து தாக்கும் அதிநவீன போர் விமானங்களை ஹிண்டன் தளத்தில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சரியான தளம் இதுதான். இவ்வாறு பிரவ்னி கூறினார்.

No comments:
Post a Comment