Sunday, October 9, 2011

ராஜிவ் காந்தி கொலை கைதி முருகன் உண்ணாவிரத அறிவிப்பு!

Sunday, October 09, 2011
வேலூர்:ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருக்கிறார்.
இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை சனிக்கிழமையில் சந்திப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை 7.30 மணியளவில் பாதுகாப்புடன் முருகன் பெண்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அரை மணி நேர சந்திப்புக்கு பிறகு மீண்டும் அவர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று காலை 10 மணியளவில் திடீரென, நளினிக்கு அடிப்படை வசதிகள் இல்லை. சுத்தமான குடிநீர் வழங்குவதில்லை. இதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்Õ என்று சிறைக்காவலர்களிடம் முருகன் கூறியுள்ளார்.
சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி வந்து, Ôஉங்கள் கோரிக்கை குறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபியிடம் தெரிவிக்கிறேன். 15 நாட்களுக்குள் பிரச்னை தீர நடவடிக்கை எடுக்கிறேன். அதுவரை உண்ணாவிரதம் வேண்டாம்Õ என்று கூறியுள்ளார்.இதையடுத்து முருகன் தனது முடிவை மாற்றிக்கொண்டார். மதிய உணவை வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment