Saturday, October 29, 2011இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கு, போதுமான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அந்த கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கைதுசெய்யப்படும் இந்திய மீனவர்களை விடுவிக்க இந்திய அரசாங்கம் முனைப்புகளை மேற்கொண்டாலும் இந்தியாவில் கைதுசெய்யப்பட்;டுள்ள மீனவர்களை விடுவிக்க இலங்கை போதிய அக்கறை காட்டுவதில்லை எனவும் ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் வரை 144 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டனர், இவர்களில் 76 பேர் மாத்திரமே இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசாங்கம் ராஜதந்திர ரீதியிலான முனைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.
உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும், பௌத்த பிக்குகளில் ஒருவர் வைத்தியசாலையில்!
இந்தியாவின் அந்தமான் தீவுகளில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி, புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பிரதேசத்தில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும், பௌத்த பிக்குகளில் ஒருவர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மீனவர்களை விடுவிக்குமாறு கோரி, இவர்கள் கடந்த செவ்வாய் கிழமை முதல் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பௌத்த பிக்குகள் மற்றும் இரண்டு மீனவர்களை பரிசோதித்த வைத்தியர்கள் அவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியிருந்தனர். இதனையடுத்து, பௌத்த பிக்கு ஒருவரும் மீனவ பெண்ணொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதேவேளை இவர்களில் போராட்டம் தொடர்பில் மீன்பிடி அமைச்சர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கல்பிட்டியில் மீனவர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. இதில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பிக்குகளும் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment