Saturday, October 29, 2011

அடுத்த பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான உரிமையை இலங்கை பெற்றுக் கொள்வதற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்!

Saturday, October 29, 2011
அடுத்த பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான உரிமையை இலங்கை பெற்றுக் கொள்வதற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று இந்தியாவின் உப ஜனாதிபதியான அஹமத் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை துரித அபிவிருத்தியைக் கொண்ட நாடாகும். இத்தகைய நாடொன்றுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்களை வழங்குவது மிக முக்கியமானதாகும் என்றும் அவர் கூறியுள்ளார். பல்வேறு தரப்பினர் எந்த அடிப்படையும் இல்லாத வகையில் இலங்கைக்கு எதிராகக் குற்றம் சுமத்துகின்றனர். அடுத்த பொதுநலவாய மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது தோல்வியான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான சதியைத் தோற்கடிப்பதற்குப் பிராந்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும். என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments:

Post a Comment