Saturday, October 29, 2011

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

Saturday, October 29, 2011
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரியான நடராஜா சிவராஜா என்பவர் விசாரணைக்கு சமுகமளிக்காததால் அவரை பிணை எடுத்த பிணையாளி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபலி விஜயசுந்தர முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.

எதிரி மலேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதால் வழக்குத் தவணைக்கு வரமுடியவில்லை எனவும் அடுத்த தவணையின் போது அவரை ஆஜர் செய்வதாகவும் பிணையாளி நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணி மூலம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி விசாரணையை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

2005 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொழும்பு 7 இல் உள்ள தனது வீட்டின் நீச்சல் தடாகத்தில் லக்ஸ்மன் கதிர்காமர் குளித்துவிட்டு வெளியே வந்த போது புலிகளின் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் மரணமானமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment