Saturday, October 29, 2011

மும்பை தாக்குதலால் இந்தியா கோபம் : போர் பீதியில் இருந்தது பாகிஸ்தான் அமெரிக்க மாஜி வெளியுறவு அமைச்சர் புத்தகத்தில் பரபரப்பு தகவல்கள்!

Saturday, October 29, 2011
வாஷிங்டன் : மும்பை தாக்குதலுக்கு பின், இந்தியா போர் தொடுக்கும் என்று பாகிஸ்தான் பீதி அடைந்தது. உடனடியாக அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகளிடம் பாகிஸ்தான் ஆதரவு கேட்டதுÕÕ என்று அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டோலிசா ரைஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையின் பல இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 165க்கும் அதிகமானோர் பலியாயினர். 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் சிக்கினான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கண்டோலிசா ரைஸ் தனது அனுபவங்கள் குறித்து, ‘நோ ஹை ஹானர்’ என்ற பெயரில் 766 பக்க புத்தகம் எழுதியுள்ளார். அடுத்த வாரம் அந்த புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது. அந்த புத்தகத்தில் மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா கோபம் அடைந்ததையும், அதன் தொடர்ச்சியாக போர் சூழல் உருவானதால் பாகிஸ்தான் பீதி அடைந்தது பற்றியும் கூறியுள்ளார். புத்தகத்தில் கண்டோலிசா ரைஸ் கூறியிருப்பதாவது: மும்பை தாக்குதல் நடந்த பிறகு இந்தியா போர் தொடுக்கும் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. பீதி அடைந்த பாகிஸ்தான், உடனடியாக சீனா, அமெரிக்கா, சவுதி அரேபிய நாடுகளுக்கு தகவல் அனுப்பியது. அதில், மும்பை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததாகவும் எச்சரித்ததாகவும், போர் தொடுப்பது பற்றி இந்தியா விரைவில் முடிவெடுக்க உள்ளதாகவும் பாகிஸ்தான் அச்சம் தெரிவித்திருந்தது. இந்த தகவலை வெள்ளி மாளிகை அதிகாரி தெரிவித்த போது, நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.

ஏனெனில் மும்பை தாக்குதல் நடந்த பிறகு அடுத்த 2 நாட்களும் இந்திய அரசுடன் தொடர்ந்து நான் பேசி வந்தேன். அப்போது, Ôஇருநாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க விரும்புவதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ஏதாவது நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்Õ என்றுதான் இந்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறி வந்தனர். அப்படி இருக்கையில், Ôஇந்தியா போர் தொடுக்க தயாராகிவிட்டதுÕ என்று பாகிஸ்தானிடம் இருந்து வந்த செய்தி அதிர்ச்சி அளித்தது. உடனடியாக அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். முடியவில்லை.. பல முறை முயற்சித்தும் முகர்ஜியை தொடர்பு கொள்ள முடியாததால், எனக்கும் சந்தேகம் ஏற்பட்டது. பாகிஸ்தான் மீது போர் தொடுக்க இந்தியா தயாராகி வருகிறதோ என்று. அதனால்தான் என்னிடம் பேசுவதை முகர்ஜி தவிர்க்கிறாரோ என்ற அச்சம் எனக்கும் தொற்றிக் கொண்டது. ஆனால், பிறகு பிரணாப் முகர்ஜியே தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, ‘பாகிஸ்தான் மீது போர் தொடுக்க போகிறீர்களா?’ என்று நான் நேரடியாகவே அவரிடம் கேட்டேன். அதை கேட்டவுடன் அவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார். Ôநான் என்னுடைய சொந்த தொகுதியில் இருக்கிறேன். பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதாக இருந்தால், டெல்லிக்கு வெளியில் நான் இருப்பேனா?Õ என்று தெரிவித்தார். (அப்போது இந்தியாவில் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்தது.) மேலும், மும்பை தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து நான் கூறிய கருத்துகளை அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தவறாக புரிந்து கொண்டுள்ளார் என்று முகர்ஜி தெரிவித்தார். பாகிஸ்தானில் இருந்து வதந்தி கிளம்பியதால், அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சென்று பதற்றத்தை குறைக்க பேச்சு நடத்துமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி அவசரமாக நான் டெல்லி சென்றேன். அங்கு பிரதமர் மன்மோகன் சிங், முகர்ஜியை சந்தித்த போது, Ôநாங்கள் போருக்கு எதிரானவர்கள். மும்பை தாக்குதலால் பொதுமக்கள் ஆவேசத்தில் உள்ளனர். சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்Õ என்று இருவரும் தெரிவித்தனர்.

அதன்பின், இஸ்லாமாபாத் சென்றேன். மும்பை தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானியர்கள் என்பதை உலகமே அறிந்திருந்தாலும், பாகிஸ்தான் தலைவர்கள் ‘இல்லை’ என்று மறுத்தனர். Ôமும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் சம்பந்தம் இல்லைÕ என்று பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறினார். அதற்கு Ôநீங்கள் என்னிடம் பொய் சொல்கிறீர்களா? அல்லது உங்கள் ஆட்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்களா?Õ என்று கிலானியிடம் கேட்டேன். மேலும், மும்பையில் தாக்குதல் நடத்த எங்கு சதி திட்டம் தீட்டப்பட்டது என்பது குறித்து எங்களுக்கு கிடைத்த ஆதாரங்கள் பற்றி கிலானிக்கு விளக்கினேன். மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு உள்ளது என்று நான் குற்றம் சாட்டவில்லை. ஆனால், ராணுவம், ஐஎஸ்ஐ போன்றவற்றில் உள்ளவர்கள், தீவிரவாதிகளுக்கு உதவி செய்திருக்கலாம். இதை ஒப்புக் கொண்டு தீவிர விசாரணை நடத்த வேண்டிய நேரம் இது என்று அவரிடம் தெரிவித்தேன். கடைசியாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானியை சந்தித்தேன். கயானியை எங்கள் ராணுவத்தினருக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர் நேர்மையானவர், மிகவும் திறமை வாய்ந்தவர் என்பதால் அவரை பிடிக்கும். ஆனால், அவரும் மும்பை தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானியர்கள் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை.
இவ்வாறு கண்டோலிசா ரைஸ் கூறியுள்ளார். Ôமும்பைÕ என்ற தலைப்பில் புத்தகத்தில் தனி பகுதி உள்ளது. அதில், டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதர்கள் தொலைபேசியில் பேசிய பேச்சுகள் மற்றும் அனுப்பிய தகவல்கள் பற்றியும் கண்டோலிசா ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment