Wednesday, October 12, 2011

ஜனநாயகமும், சமாதானமும், நிலைநாட்டப்படவேண்டும் - உருகுவே!

Wednesday, October 12, 2011
இலங்கையில் ஜனநாயகமும், சமாதானமும், நிலைநாட்டப்பட வேண்டுமென விரும்புவதாக உருகுவே நாடு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு குழுவினருக்கும், உருகுவே பிரதி வெளிவிவகார அமைச்சர் கொன்டோ கராரஸிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமெனவும் உருகுவே கோரியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாத மத்தியில் அந்த ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதனிடையே, இலங்கையில் சமாதானமும், ஜனநாயகமும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று உருகுவே விரும்புவதாக அந்நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கும் உருகுவேக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளைப் பேணுவது குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் நேற்று மன்னாருக்கான விஜயம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

கடந்த யுத்தசூழ்நிலையில் பெற்றோரை தவரவிட்ட சிறார்களை கண்டுபிடிக்கும் முகமாக மாவட்டத்தில் உள்ள சிறார் இல்லங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்தின் சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அதிகாரி மைக்கல் கொலினின் உதவியுடன் மன்னாரில் யுத்த்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாராமறித்து வரும் சிறுவர் இல்லங்களின் இயக்கனர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, பாதிக்கப்பட்ட சிறுவர்களுடனும் நேரடியாக கதைத்து அவர்களுடைய விபரங்களை பெற்றுக்கொண்டனர்.

யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து கடைசியாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து பின்னர் நலன் புரி நிலையங்களுக்கு மாற்றப்பட்டதாக குறித்த சிறார்கள் தெரிவித்துள்ளனர்.

தமது பெற்றோர் விசாரனைகளுக்காக அழைத்துச்செல்லப்பட்டு பூசா முகமில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன் பூசா தடுப்பு முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு;ள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment