Wednesday, October 12, 2011

தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார் – பான் கீ மூன்!

Wednesday, October 12, 2011
தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தம்மாலான சகல முயற்சிகளையும் எடுக்கப்போவதாக ஜனாதிபதி உறுதியளிதுள்ளார் என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்கும் வரையில் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு சகல பிரச்சினைகளையும் ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரை செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகளை அமுல்படுத்தும் வரையில் தாம் காத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னதாக நிபுணர் குழு அறிக்கை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கையை மனித உரிமைப் பேரவை தற்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியூயோர்க்கில் சந்தித்ததாகவும், பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்படும் எனவும், உள்நாட்டு ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்ததாகக் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment