Wednesday, October 12, 2011அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியில் போலி நாணயத்தாள் அச்சிடும் நிலைமொன்றை நடத்திச் சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்படட்தையடுத்து சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கணனி உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்...
No comments:
Post a Comment