Thursday, October 13, 2011

கைதிகள் சர்ச்சை : முன்னாள் அதிபர் புஷ்சை கைது செய்ய வலியுறுத்தல்!.

Thursday, October 13, 2011
லண்டன்: தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் மனிதநேயத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சை கைது செய்ய வேண்டும் என்று லண்டனை சேர்ந்த பொது மன்னிப்புக் கழகம் வலியுறுத்தி உள்ளது. கனடாவில் வரும் 20ம் தேதி பொருளாதார மாநாடு நடக்கிறது. இதில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பங்கேற்கிறார். மாநாட்டில் பங்கேற்க வரும் புஷ்சை கைது செய்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லண்டனை சேர்ந்த பொது மன்னிப்புக் கழகம் கனடா அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து கழகத்தின் உறுப்பினர் சூசன் லீ கூறியதாவது: கடந்த 2002 - 2009ம் ஆண்டுகளில் புஷ் அதிபராக இருந்த போது ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் மனிதநேயத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளார். குவான்டனாமோ உள்பட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு புஷ் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, அவர் மீது சர்வதேச சட்டதிட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளோம். கொடூரமான முறையில் கைதிகள் சித்ரவதை செய்யப்பட்ட பிரச்னையில், புஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தின. இதுவரை அமெரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கனடா வரும் புஷ்ஷை அதிகாரிகள் கைது செய்யாவிட்டால், அது ஐ.நா. ஒப்பந்தத்தை மீறுவது போலாகும்.

No comments:

Post a Comment