Thursday, October 13, 2011

செனல்ஃபோவுக்கு பதிலளிக்கும் காணொளி பிரித்தானியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!

Thursday, October 13, 2011
பிரித்தானியாவின் செனல்ஃபோ அலைவரிசை ஒளிபரப்பிய கொலை களம் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் தயாரித்த ஆவணப்படம் முதற் தடவையாக பிரித்தானியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நேற்று இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணப் படம் காட்சிப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு கலந்துரையாடலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, பிரித்தானியாவிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் கலாநிதி க்ரிஸ் நோனிஸ் ஆகியோரும் பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

செனல் ஃபோ அலைவரிசையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

அங்கு கருத்து வெளியிட்ட பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் கலாநிதி க்ரிஸ் நோனிஸ், இலங்கையின் சமூகங்களுக்கிடையே நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் வகையிலும் பக்கச்சார்பற்ற செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment