Thursday, October 13, 2011
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸின் நண்பர் அடம்வெரிற்றியின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சித்ததாக சனல் 4 தொலைக்காட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி சனல் 4 தொலைக்காட்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக லியம்பொக்ஸும் அவரது நண்பர் அடம் வெரிற்றியும் ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்கு வந்து போனதாகவும் ஒவ்வொரு முறையும் வரும்போதும் லியம் பொக்ஸ் வெரிற்றியை அழைத்துவந்ததாகவும் லியம் பொக்ஸின் விடுமுறைப் பயணத்தில் கூட அவர் இலங்கை வந்ததாகவும் இலங்கை உயர் வட்டாரங்கள் சனல் 4 தொலைக்காட்சியிடம் கூறியுள்ளன.
இலங்கையில் போருக்கு பிந்திய நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தவே லியம் பொக்ஸ் இலங்கை சென்றதாக அவரது பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆனால் அடெம் வெரிற்றி ஆயுத பேரம் தொடர்பாக இலங்கைக்கு தொடர்ச்சியான பயணங்களை மேற்கொண்டதாகவும் இலங்கை அரசாங்கத்தின் செலவிலேயே அங்கு தங்கியிருந்ததாகவும் இலங்கையின் மூன்று உயர்மட்ட வட்டாரங்கள் சனல் 4 தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளன.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் உள்ள மூத்த பிரமுகருடன் கலந்துரையாடும் ஒருவராகவே வெரிற்றி செயற்பட்டுள்ளார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இலங்கை அரசின் அந்த முக்கிய பிரமுகர் அடம் வெரிற்றியுடன் பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து ஆயுதங்கள் பாதுகாப்புக் கருவிகள், விமான உதிரிப்பாகங்களைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் இலங்கை உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தக் கலந்துரையாடல் எப்போது நடந்தது என்று தமக்குத் தெரியாது என்றும் மற்றொரு உயர்மட்ட வட்டாரம் சனல் 4 தொலைக்காட்சியிடம் கூறியுள்ளது.
மற்றொரு உயர்மட்ட வட்டாரம் அடம் வெரிற்றி 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு வந்ததாக கூறியுள்ளது.
அத்துடன் இலங்கை அரசுக்கு அனைத்துலக அளவில் நற்பெயரைத் தேடிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அனைத்துலக அளவில் இலங்கையின் பெயர் மோசமாக கெட்டுப் போயுள்ள நிலையில் மேற்கு நாடுகளில் உள்ள பொது மக்கள் உறவு நிறுவனங்களுக்கு இலங்கை ஆட்சியாளர்கள் பெரும் தொகைப் பணத்தை வழங்கியுள்ளனர்.
இது பற்றிய கலந்துரையாடல்களில் வெரிற்றி பங்கேற்றதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக சனல் 4 கூறியுள்ளது.
பிந்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சனல் 4 வெரிற்றியுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் சனல் 4 தெரிவித்துள்ளது.
இதற்கிடையே இலங்கை அரசுடன் எத்தகைய உறவு உள்ளது என்பது குறித்து பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரித்தானிய நிழல் பாதுகாப்பு அமைச்சர் எம்மா றெனோல்ட்ஸ் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment