Monday, October 24, 2011
கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் லிப்டில் ஏறிச் சென்ற இளம் பெண்ணுடன் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட இளைஞர் ஒருவருக்கு கோட்டை நீதிவான் ஒருவருட சிறைத் தண்டனை விதித்தார்.
இப் பெண் இந்த ஹோட்டலில் நிகழ்வு ஒன்றிற்காக வந்து லிப்டில் ஏறி மேல் மாடிக்குச் சென்றார். அப்போது லிப்டில் இப் பெண்ணுடன் காணப்பட்ட இளைஞர் அவருடன் பாலியல் சேஷ்டை புரிந்துள்ளார்.
இவருக்கு எதிராக லிப்டில் ஏறிச் சென்ற எட்டுப்பேர் சாட்சியம் அளித்தனர். விசாரணை முடிவில் கோட்டை நீதிவான் லங்கா ஜயரட்ண மேற்படி சிறைத் தண்டனையையும் 1500 ரூபா அபராதமும் விதித்தார். அத்துடன் பெண்ணுக்கு 75 ஆயிரம் ரூபாவை நட்ட ஈடாகச் செலுத்துமாறும் உத்தரவிட்டார்.
சந்தேகநபர் ஆரம்ப விசாரணைகளில் நீதிமன்றத்துக்கு வந்தார் எனவும் பின்னர் வரவில்லை என்பதால் அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்குமாறும் நீதிவான் பிடியாணை பிறப்பித்தார். சந்தேக நபர் இன்றி விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment