Tuesday, October 25, 2011

யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவந்த ரோலர் மீன்பிடியைத் தடுப்பதற்கு நேற்றுமுதல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது-ராஜித சேனாரட்ண!

Tuesday, October 25, 2011
யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவந்த ரோலர் மீன்பிடியைத் தடுப்பதற்கு நேற்றுமுதல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ணவின் உத்தரவுக்கமைய ரோலர் மீன்பிடியைத் தடுக்க நடவடிக்கை எடுத்தி ருப்பதாக மீன்பிடித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ரவீந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்திருந்த மீன்பிடித்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண விடம் யாழ் குடாநாட்டு மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்துச் சுட் டிக்காட்டப்பட்டது.

இதன்போது ரோலர் மீன்பிடி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழில்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழில்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அமைச்சர் கடும் உத்தரவு பிறப்பித்தார். இதற்கமைய நேற்றையதினம் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது என ரவீந்திரன் தின கரனுக்குத் தெரிவித்தார்.

பொலிஸாருடன், திணைக்களத்தின் அதிகாரிகள் சென்று ரோலர் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லவேண்டாமென மீன வர்களுக்கு நாம் அறிவுறுத்தியிருந்தோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேநேரம், தடைசெய்யப்பட்ட மீன் பிடி முறையைத் தடுப்பதற்கு அமைச்சர் எடுத்திருக்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தின் தலைவர் தவரட்ணம் தெரிவித்தார்.

ரோலர் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்ட 5, 6 மீன்பிடி முறைகள் தடைசெய்யப்பட வேண்டுமென கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதலே வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது. எனினும், அதனைக் கடுமையாக நடைமுறைப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் அமைச்சர் ராஜித சேனாரட்ணவின் யாழ் விஜயத்தின் பின்னர் ரோலர் மீன்பிடிமுறை தடைசெய் யப்பட்டிருப்பதானது வரவேற்கத்தக்க விடயம் என அவர் குறிப்பிட்டார்.

இது இவ்விதமிருக்க, ரோலர் மீன்பிடிக்குச் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் மீனவர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் ரோலர்களைப் பயன்படுத்துகிறார்கள், ஏன் எம்மை ரோலர் பயன்படுத்தி மீன்பிடிக்க வேண்டாமென்று கூறுகிaர்கள்? என மீனவர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

No comments:

Post a Comment