Monday, October 24, 2011

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தகவல் தலிபான்களுடன் அமைதி பேச்சு நடத்த தயார்!

Monday, October 24, 2011
இஸ்லாமாபாத்: தலிபான்களுடன் அமைதி பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகள், ஹக்கானி தீவிரவாத கும்பலுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ நேரடி உதவி செய்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சு நடத்த தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உயரதிகாரிகள் தகவல் அனுப்பி உள்ளனர் என்று டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து உயரதிகாரிகள் கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரியுடன் பாகிஸ்தான் உயர் மட்ட குழு பேச்சு நடத்தியது. அப்போது தலிபான்களுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தலிபான்களுடன் பேச்சு தொடங்குவதற்கு முன்பே, அல் கய்தா தீவிரவாத அமைப்புடன் உள்ள தொடர்பை கைவிட வேண்டும், ஆயுதங்களை கீழே போட வேண்டும், ஆப்கன் சட்டத்திட்டங்களை மதிக்க வேண்டும் என்றெல்லாம் அவர்களை நிர்பந்தபடுத்த முடியாது. ஏனெனில், ஆப்கானிஸ்தானின் கலாசாரம் எங்களுக்கு தெரியும். அவர்கள் ஆயுதங்களை கீழே போட மாட்டார்கள்.
இவ்வாறு உயரதிகாரிகள் கூறினர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகளுக்கு ஆயில் சப்ளை செய்யும் பாகிஸ்தானின் 2 ஆயில் நிறுவனங்களிடம் தலா ரூ.20 கோடி கேட்டு தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அதற்காக 20 நாள் கெடுவும் விதித்துள்ளனர்.

No comments:

Post a Comment