Monday, October 24, 2011
இலங்கை மீது போக்குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் மேற்கத்தைய ராஜ்ஜியங்கள், லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முவம்மர் அல் கடாபியின் கொலை தொடர்பில் இரட்டை நிலைப்பாடுகளை கடைபிடிப்பதாக சட்டவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிருடன் பிடிக்கப்பட்ட கடாபி பின்னர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை யுத்த குற்றங்களில் ஒன்றுதான் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று, இலங்கைமீது யுத்தக்குற்றச்சாட்டுகளை சுமத்தும் மேற்குலக நாடுகளின் ஊடகங்கள், கடாபி தாக்கப்பட்டமையை உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பியதாக அவர் சுட்டிக்காட்டியு;ளளார்.
லிபியாவின் நெருக்கடிக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ராணுவ ரீதியான தலையீட்டை மேற்கொள்ளாத போதும், அவர்கள் நேரடியான பொறுப்புகூற வேண்டியுள்ளவர்களாக இருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி குறிப்பிட்டார்.
அதேவேளை, செனல் போ போன்ற ஊடகங்களும் கேணல் முவம்மர் கடாபியின் கொலை தொடர்பில் அமைதியான போக்கை கடைபிடித்து வருவதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

No comments:
Post a Comment