Sunday, October 23, 2011

இத்தாலியில் இலங்கையர்களுக்கு வேலைவாய்பு!

Sunday, October 23, 2011
வருடாந்தரம் 3 ஆயிரத்து 500 பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் இத்தாலிக்கு அனுப்பும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வருடம் முதல், குறிப்பிட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இத்தாலியின் தொழில் மற்றும் சமூக நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மயுரிசியோ மற்றும் அமைச்சர் டிலான் பெரேராவிற்கும் இடையில், அண்மையில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி, தாதியர், சாரதியர், வீட்டுப் பணிப்பெண்கள் போன்ற தொழிலுக்காகவும், அதுபோல, தொழில் நுட்பத்துறையில் பயிற்சி பெற்றவர்களை இதாலிக்கு அனுப்ப இலங்கையால் முடியும்.

இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டில் முற்பகுதியில் இருந்து இந்தாலிய மொழியை கற்பிக்கும் பயிற்சிநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இத்தாலியில் தற்சமயம், 75 ஆயிரம் பணிப்பெண்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment