Sunday, October 23, 2011

பல்லாயிரம் கோடிகளை அள்ளும் தீபாவளி ஷாப்பிங்!

Sunday, October 23, 2011
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை பண்டிகை என்றாலே தீபாவளிதான் என்று கூறும் அளவுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 10, 15 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஆண்டு தீபாவளி முக்கியத் திருநாளாக மாற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பண்டிகைகள், தொழிலை மையமாக வைத்துத்தான் கொண்டாடப்பட்டு வந்தது. அதில், தமிழர்களின் பண்டிகையாக பொங்கல்தான் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அதற்கு முக்கிய காரணம், கிராமங்களில் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. விவசாயமும் அதிக அளவில் செய்யப்பட்டது. மக்களிடமும் பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. அதேநேரத்தில், அரசாங்க ஊழியர்களுக்கும் பொங்கல் அன்றுதான் முன் பணம் கிடைக்கும்.
அதனால், Ôபெண்ணை கொடுத்தால், அரசாங்க ஊழியருக்குத்தான் கொடுப்பேன்Õ என்று முன்பெல்லாம் பெரியவர்கள் சொல்வதுண்டு. அரசு ஊழியர் என்றால் நிரந்தரமாகவும், கை நிறையவும் வருமானம் கிடைக்கும் என்று கூறுவார்கள்.
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் பணம் கிடைக்கும். அதை வைத்து புது உடைகள் வாங்கி, பொங்கலை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
அதேபோல, உழவர் திருநாளான மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி, ரேஸ், மாடு விரட்டுதல் போன்ற போட்டிகளை நடத்துவார்கள், மாடுகளை அடக்கும்போட்டிகள் நடக்கும். அதை பார்க்கவே வண்டிகளை கட்டிக் கொண்டு கிராமங்களில் இருந்து பக்கத்து கிராமங்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று வந்தனர். இவைகள் எல்லாமே கிராமங்களை சார்ந்து இருந்ததால், பொங்கல் பண்டிகை சிறப்பாக நடந்து வந்தன.
ஆனால், இன்று தமிழகத்தில் சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை பண்டிகை என்றாலே தீபாவளியைத்தான் கூறுகிறார்கள். அதற்கு காரணம், பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும், நவீனமயமாக்குதலிலும் ஏற்பட்ட மாற்றம்தான்.

சென்னை நகரத்தை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் எல்லாம் இன்று தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. மீதம் உள்ள நிலங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், தொழில் பூங்காக்களாகவும் மாற்றப்பட்டு விட்டன. இதனால் கிராமங்கள் அழிந்து நகரங்களாக உருமாறி வருகின்றன.
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் ஆறுகள், குளங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்துபோய் விட்டன. வைகை ஆறு பாய்ந்த மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் எல்லாம் வறண்டு, குடி தண்ணீருக்கே ஏங்கி நிற்கும்நிலைதான் உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு கூட தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டது. அதனால் அங்கும் விவசாயம் படுத்து விட்டது.

கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியும் டூரிஸ்ட் பகுதியாக உள்ளதால் விவசாயம் என்பது கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாகத்தான் உள்ளது. நாகரீக வளர்ச்சியினால் கிராமங்களில் உள்ளவர்களும் நகரத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
விவசாயத்துக்கு ஆள் பற்றாக்குறை ஒரு பக்கம், விவசாய கருவிகளும் இயந்திரமயமாகி வருவதாலும், தொழிலாளர்கள் பலர் நகரத்துக்கு வரத்தொடங்கியுள்ளனர். அதனால் விவசாயத்தின் குறியீடுகள் காணக்கிடைக்கவில்லை. இதனால் விவசாயம் சார்ந்த பொருளாதாரம் சரிந்துவிட்டது. அதனால் பெங்கல் பண்டிகைக்கு கிடைத்த முக்கியத்துவம் இப்போது இல்லாமல் போய் விட்டது.
அதேநேரத்தில் தனியார் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியாலும், தனியார் நிறுவனங்களின் பெருக்கத்தாலும், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை காணாமல் போய் விட்டது. அரசு பணிகளை விட தனியார் பணிகளில்தான் பல ஆயிரம் முதல் கோடிகளில் சம்பளம் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் குறிப்பாக கம்ப்யூட்டர் நிறுவனங்களின் ஆதிக்கத்தால், அரசு ஊழியர்களின் எண்ணிக்கை காணாமல் போய் விட்டது. இப்போது ஏற்பட்டுள்ள உலக மயமாக்கத்தால், தனியார் நிறுவனங்கள்தான் பொருளாதார சந்தையை தீர்மானிப்பவையாக உள்ளன.

அதேநேரத்தில் வியாபாரிகள் தங்களின் வர்த்தகத்தை விரிவு படுத்த தீபாவளியை செல்லப்பிள்ளையாக்கி விட்டனர். அதற்காக சிறப்பு தள்ளுபடிகள், கவர்ச்சித் திட்டங்களையும் அறிவிக்கின்றனர். வர்த்தகர்களின் கண்ணோட்டத்தில் கோடிகளை புரட்டும் பண்டிகையாக தீபாவளி ஆக்கப்பட்டு விட்டது. டிவிக்கள், பத்திரிகைகள், சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், துண்டு பிரதிகள் என்று எங்கு பார்த்தாலும் தீபாவளிக்காக வியாபார நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மக்களின் வாங்கும் ஆர்வத்தை தூண்டுகின்றனர்.
குறிப்பாக உடைகள் விற்பனை செய்யும் கடைகள் ஒரே திட்டத்தை பல வகைகளாக பிரித்து அறிவிப்பு செய்கின்றனர். ஒரு கடை 2 துணி எடுத்தால் 2 இலவசம் என்றும், சில கடைகள் குறிப்பிட்ட ரூபாய்க்கு உடைகள் வாங்கினால் அதே விலைக்கு வேறு உடைகள் வாங்கலாம் என்று அறிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், மரச்சாமான்கள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் என்று எல்லா வகையான பொருட்களுக்கும் கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. கடைகளில் மட்டும் விற்பனை என்றில்லாமல், பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாய நலக் கூடாங்கள் அல்லது சிறிய இடம் காலியாக இருந்தால் கூட அங்கும் தற்காலிகமாக கடைகளை விரித்து விற்பனை செய்யத் தொடங்குகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல தனியார் நிறுவனங்கள் தீபாவளிக்கு போனஸ் அறிவிக்கின்றனர். பொங்கலுக்கு அரசு ஊழியர்களுக்கு மட்டும் முன் பணம் வழங்கப்படுகிறது. இதை ஒப்பிட்டுப் பார்த்தால் பல மடங்கு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போனசாக வழங்கப்படுகிறது. போனஸ் வழங்குவதற்கு முன்னரே தங்களது கவர்ச்சித் திட்டங்களால் மக்களை கவர்ந்திழுக்கும் வியாபாரிகள், போனஸ் வாங்கியவுடன் வீட்டுக்குச் செல்வதற்கு முன் கடைகளுக்குச் சென்று வாங்கும் நிலைக்கு தள்ளிவிடுகின்றனர்.
இந்தநிலை சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில் மட்டுமில்லாமல், சிறிய நகரங்களிலும் தீபாவளி செல்லப்பண்டிகையாகிவிட்டது. கிராமங்களில் கூட, தீபாவளியைத்தான் பெரிய அளவில் கொண்டாடுகின்றனர். குறிப்பாக கிராமங்களில் இருந்து சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு குடும்பத்துடன் வந்து ஷாப்பிங் செங்கின்றனர். இதனால் சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை ஆகிய இடங்களில் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கடைகளில் கடுகளை கீழே சிந்தினாலும் விழாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது.
தீபாவளி அன்றுதான் பட்டு உடுத்தி, காலையிலேயே கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடுகின்றனர். இதனால் வட இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த தீபாவளி இன்று தமிழகத்திலும் ஒரு முக்கிய பண்டிகையாகி மாறிவிட்டதால், தீபாவளி என்பது பல ஆயிரம் கோடியைத் தாண்டும் ஷாப்பிங் திருவிழாவாகத்தான் உள்ளது.

புதுவை: நேரு வீதி
புதுச்சேரியின் அடையாளமாகவும், கடைகள் என்றாலே நினைவுக்கு வருவதும் நேரு வீதி தான். சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் நீண்டு இருக்கும் இந்த தெருவில் தற்போது திருவிழாக்கோலம்.
பிரெஞ்சு ஆட்சியாளர்கள் ஆட்சி செய்த போது புதுவையின் வீதிகள் அனைத்தும் கடற்கரைக்கு செல்லும் வகையில் அழகாக திட்டமிட்டு பிரித்தனர். வசதி படைத்தவர்கள் வசிக்கும் புல்வார் என்று அழைக்கப்பட்ட நகரப்பகுதியின் முக்கிய வீதி நேரு வீதி. கடந்த 175 ஆண்டுகளுக்கு மேலாக கடைவீதியாக இருக்கும் இந்த வீதி ஆரம்பத்தில் வழுதாவூர் சாலையாக இருந்தது.
வழுதாவூரில் உள்ள கோட்டைக்கு பிரெஞ்சு ஆட்சியாளர்கள் சென்று வர இந்த வீதியை பயன்படுத்தியதால் வழுதாவூர் சாலை என்ற பெயர் பெற்றது. இதன் பின்னர் 1911ம் ஆண்டு பிரெஞ்சு கவர்னராக இருந்த டியூப்லெக்ஸ் பெயர் சூட்டப்பட்டது.
சுதந்தர இந்தியாவுடன் புதுச்சேரி இணைக்கப்பட்ட பின்னர் காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நேரு வீதி என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மீன் மார்க்கெட், பெரிய மார்க்கெட், துணி கடைகள், இனிப்பு, ஓட்டல்கள், பட்டாசு கடைகளுடன் பலசரக்கு கடைகள் இந்த வீதியில் இருக்கிறது. மற்ற பண்டிகைகளை விட தீபாவளி பண்டிகைக்கு நேரு வீதியில் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதும். பண்டிகை காலங்களில் குறிப்பாக தீபாவளி பண்டிகையில் இந்த நேரு வீதியில் மட்டும் தினமும் சுமார் ஸீ25 கோடிக்கு மேல் விற்பனை நடக்கும்.

நெல்லை:
வடக்குரதவீதி
நெல்லுக்கு வேலியிட்ட நகரம் நெல்லை ‘திருநெல்வேலி‘ எனப் பெயர் பெற்றது. இதற்கு சாட்சியாக இங்கு நெல்லையப்பர் கோயில் உள்ளது. நெல்லையப்பர் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள நான்கு ரதவீதிகளும் தான் நெல்லையின் முக்கிய வீதிகள். ரதவீதிகள் உருவாகி 500 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. நூற்றாண்டுகளுக்கு முன்பு மேலரதவீதி, வடக்குரதவீதியில் அனைத்தும் கைத்தறி கூடங்கள் தான். இந்த கைத்தறி தான் வடக்குரதவீதியில் ஜவுளிக்கடைகளுக்கு வித்திட்டது.
84 ஆண்டுகளுக்கு முன்பு வடக்குரதவீதியில் ஆரெம்கேவி ஜவுளிக்கடை தொடங்கப்பட்டது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு முன்பு போத்தீஸ் ஜவுளிக் கடை வந்தது. சென்னையில் எப்படி ரங்கநாதன் தெருவோ, அதே போல நெல¢லையில் தீபாவளி மற்றும் விசேஷ நாட்களில் வடக்குரதவீதியில் கூட்டம் அலைமோதும். போலீசாரும் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கும் அளவிற்கு மனித தலைகளாக தான் தெரியும். இதனால் தான் வடக்குரதவீதியை ‘பாரம்பரிம¤க்க வடக்குரதவீதி‘ என்று அழைக்கின்றனர். இந்த வீதியை அலங்கரிப்பவை அனைத்தும் ஜவுளிக்கடைகள் தான்.

கோவை:
ஓப்பணக்கார வீதி
கோவையில் வியாபார தளம் என்றால் அது ஒப்பணக்கார வீதிதான். டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள ஒப்பணக்கார வீதியில், சிறியதும், பெரியதுமாக 3 ஆயிரத்தக்கும் அதிகமான ஜவுளிக்கடைகள் உள்ளன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இங்கு கால் வைப்பதற்கு கூட இடம் இருக்காது. ஒரு நாளைக்கு ஸீ10 கோடி முதல் ஸீ15 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். கோவையை ஆண்ட மன்னர்கள் ராஜவீதி அரண்மனையில் வசித்து வந்துள்ளனர். அப்போது அரச குடும்பத்துக்கு ஒப்பணை செய்வதற்காக ஏராளமான ஒப்பனை கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
ஒப்பனைக்காரர்கள் வசித்த பகுதி என்பதால் ஒப்பனைக்கார வீதி என அழைக்கப்பட்டது. கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் கோவையில் வசித்தபோது இந்த கலைஞர்கள் இடம்பெயர்ந்தனர்.
1990ல் கோவையில் ராபர்ட் ஸ்டேன்ஸ் பஞ்சாலையை உருவாக்கினார். பின் சிறிய அளவில் ஜவுளிக்டைகள் துவங்கப்பட்டன. தீபாவளி போனஸ் கொடுக்கும் பழக்கம் உருவாகி, மில்லில் இருந்து போனஸ் வாங்கி வரும்போது நேராக ஜவுளிக்கடைக்குச் சென்றபிறகுதான் வீட்டுக்குச் செல்வார்கள்.
மதுரை:
விளக்குத்தூண்
மதுரையில் மொத்தம் மற்றும் சில்லரை ஜவுளிகள் விற்பனை 90சதவீதம் இங்கு தான் நடக்கிறது. கீழமாசி வீதியில் மளிகை கடைகள், தெற்காவணி மூல வீதியில் நகைக்கடைகள், மேலமாசி வீதியில் எலக்ட்ரானிக், வீட்டு உபயோக பொருட்கள் என்பதோடு பிரதான ஜவுளி, நகைக்கடைகள் நிறைந்த தெற்குமாசி வீதியும், நெசவாளர்களை அதிகம் கொண்ட மஹால் பகுதியையும் கொண்டு விளக்குத்து£ண் விளங்குகிறது.
1834 முதல் 1847வரை மதுரை கலெக்டராக இருந்த பிளாக்பர்ன், இங்கிருந்த கோட்டை சுவர்களை இடித்து நகரை விரிவுபடுத்தினார்.
அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மதுரை மக்கள் விசுவாச அடையாளமாக தெற்குமாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில், ஏற்படுத்தியது தான் விளக்குத்து£ண். ஏழை, எளியோர் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அத்தனை ஜவுளிகளையும் குறைந்த விலையில் இங்கு அள்ளலாம்.
வசதி படைத்தோருக்கு ஏற்ற வகையில் பெரிய, பெரிய கடைகளும் இங்கு உண்டு. சாதாரண நாட்களில் ஸீ10கோடிக்கு வணிகம் நடக்கிறது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில், இருமடங்கு எகிறுகிறது.

No comments:

Post a Comment