Sunday, October 23, 2011

மத்திய அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல் காங்கிரஸ் ஆட்சியில்லாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனதுடன் நடத்துகிறது!

Sunday, October 23, 2011
சென்னை: காங்கிரஸ் ஆட்சி நடக்காத மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
புதுடெல்லியில் நடந்த 56வது தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டு முதல்வரின் அறிக்கையை வாசித் தார். அதில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநில அரசுகளை குற்றநோக்கத்தோடு பார்க்கிறது. இந்திய மக்கள்தொகையில் காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநில அரசுகளில் உள்ள மக்கள்தான் அதிகம் உள்ளனர் என்பதை மத்திய அரசு கவனிக்கத்தவறியுள்ளது. மக்களின் உண்மையான தேவைகளைக் கூட மத்திய அரசு தீர்த்துவைக்க முன்வரவில்லை.
மேற்கு வங்க அரசு காங்கிரஸ் அரசுடன் கூட்டணி வைத்துள்ளதால் அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மத்திய அரசு காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநில அரசு களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது என்பது விளங்குகிறது.
மத்திய அரசு சமீபத்தில் இனக்கலவரத் தடுப்பு சட்டம் என்ற சட்டத்தை அறிமுகம் செய்து மாநில அரசின் அதிகாரத்தை மீறும் வகையில் செயல்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் கருணைக் காக மாநில அரசுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசை மிரட்டும் வகையில் மத்திய அரசு நடந்து கொண்டுவருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசியல மைப்பு சட்டப் பிரிவு 356ஐ பயன்படுத்த மத்திய அரசுக்கு குறைந்தபட்ச அதிகாரமே உள்ளது.

மாநில அரசுகளிடம் ஆலோசனை எதையும் பெறாமல் பொது விற்பனை வரிச் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயன்று வருகிறது. இதன் மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வாட் வரியை தனதாக்கிக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது.
வாட் வரிதான் மாநில அரசுகளின் வருவாய் ஆதாரங்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பொது விற்பனை வரிச் சட்டம் கொண்டுவரப்படும் போது மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற் படும் என்ற பயம் மாநில அரசுகளிடம் எழுந்துள்ளது.
பொருட்களின் விலைவாசி ஏற்றத்தை தடுப்பதில் மத்திய அரசு தவறிவிட்டது. உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ள து. இந்த விலையேற்றத்தை தடுக்க முன்வராத மத்திய அரசு மேலும் மேலும் பெட்ரோலிய பொருட்களின் விலையை 2004 முதல் 2011க்குள் 13 முறை உயர்த்தியுள்ளது. இதனால், ஸீ29.30திலிருந்து ஸீ43.80 ஆக டீசல் விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை 19 முறை உயர்த்தப்பட்டு ஸீ41.25லிருந்து ஸீ67.22 ஆக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் ஸீ249.02லிருந்து ஸீ404.40ஆக உயர்ந்துள்ளது. இப்படிச் சென்றால் பணவீக்கம் எப்படி குறையும். இந்த விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
மாநில அரசுகளின் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு சகோதர மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். மக்கள் வளர்ச்சி நடவடிக்கைகள் மாநில அரசுகளினால்தான் செய்ய முடியும். ஆனால், மத்திய அரசு நீண்ட தூரத்தில் இருந்து திட்டங்களை அமைத்த வருகிறது. இது மக்களின் தேவைகளை திருப்திபடுத்த சரியானதாக இருக்காது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் தலை வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நெல், கரும்பு, காய்கறி உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு விவசாயத்துறைக்கும் அதன் தொடர்புடைய கால்நடை பராமரிப்பு துறைக்கும் உரிய ஆதரவு தரும் பட்சத்தில் விவசாயத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை மாநில அரசுகள் எட்ட முடியும்.

நீர் ஆதாரங்கள் விவசாயத்தின் முக்கிய அம்சம். பருவ மழையையே எதிர்பார்த்து விவசாயம் உள்ளது. காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தில் மத்திய அரசிடம் வைத்த கோரிக்கைகள் தோல்விய டைந்தாலும் தமிழக அரசு சொந்த செலவில் மாநிலத்துக்குள் உள்ள அணைகளை இணைப்பதற்காக ஸீ4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசை நம்பியே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகி றது என்றாலும் இது குறித்து திட்டக் குழு அறிக்கையில் கூறப்படவில்லை.

தமிழக அரசு அடிப்படை கட்டுமானங்களுக்காக “தமிழ்நாடு 2025 விஷன் டாக்குமெண்ட்“ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மட்டுமல்லாமல், மின் உற்பத்தியை அதிகரிப்பது, மின்சாரத் தின் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும் திட்ட அறிக்கையில் கூறப்படவில்லை. மின் உற்பத்திக்கு மத்திய அரசு உதவி செய்யாத பட்சத்தில் எப்படி தொழிற்துறையில் அதிக வளர்ச் சியை பெற முடியும்.
தமிழக அரசு சூரிய மின்சக்தியை பெருக்கும் திட்டத்தில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறது. ஆனால், தேசிய சூரிய கழகம் சூரிய மின்சக்தி திட்டத்தில் தனியாரின் பங்குக்கு தரும் ஊக்கத் தொகையில் கட்டுப்பாடு வைத்துள்ளதை அறிகிறோம். எனவே, இந்த ஐந்தாண்டு திட்டத்தில் சூரிய மின் சக்திக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளால் இடப்பற்றாக்குறையான நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. இதேபோல், தூத்துக்குடி, எண்ணூர், குளச்சல், கடலூர், நாகப் பட்டினர் துறைமுகங்களிலும் பிரச்னைகள் உள்ளன.
ஜவஹர்லால் தேசிய கிராமப் புனரமைப்பு திட்டத்தின் கீழ் தரப்படும் உதவியில் கழிவு நீர், திடக்கழிவு ஆகியவற்றை அகற்றுவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் சேர்க்க வேண்டும். திருப்பூரில் தொழிற்சாலைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால், சாயப்பட்டறைகளில் உள்ள சாயக் கழிவுகளை அப்புறப்படுத்த உரிய வசதிகள் இல்லை.

எனவே, சாயக் கழிவுகளை அப்புறப்படுத்த தமி ழக அரசு ஸீ200 கோடி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் குழந்தை பிறப்பு 1.7 சதவீதமாக குறைந்தது. அதே நேரத்தில் குழந்தை இறப்பு விகிதமும் மிகவும் குறைந்தது. மாவட்ட அளவிலும், மாவட்ட தலைநகரங் களிலும், துணை தலை நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிதிப் பற்றாக்குறை உள்ளது. இதற்கு 12வது ஐந்தாண்டு திட்டத்தில் மத்திய அரசு உரிய முக்கியத்துவம் தர வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

No comments:

Post a Comment