Sunday, October 30, 2011
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவையும் பொதுநலவாய நாடுகளின் தலைவி இரண்டாவது எலிசபெத் மகாராணியும் இளவரசர் பிலிப்பும் இரவு விருந்துபசாரத்திற்கு வரவேற்றபோது எடுத்த படம்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 22 வது பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உலக நாடுகளின் ஊடகத்துறையைச் சார்ந்த வர்களின் கவனத்தை ஈர்த்த பெரும் தலைவராக கணிக்கப்பட்டுள்ளார். உலகத் தலைவர்களின் மத்தியில் தனித்துவமாக மஹிந்த ராஜபக்ஷ விளங்குவதாக ராஜதந்திரிகள் மட்டத்திலும் பேசப்படுகிறது.
இலங்கையில் மூன்று தசாப்த காலமாக தலைவிரித்தாடிய பயங்கர வாதத்தை யொழித்து இன்று நாட்டில் அபிவிருத்தியையும், வாழ் வாதாரத்தையும் துரிதமாக முன்னேற்றி வரும் அவரின் செயற்பாட்டை உலக தலைவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர். ஜனாதிபதியின் துணிச்சலான இக்கைங்கரியத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் எழுந் துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவுஸ்திரேலிய பிரதமரும் அந்நாட்டு நீதித்துறையினரும் குற்றச்சாட்டை மறுதலித்ததோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவித் துள்ளமையும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அடுத்து வரும் உலக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் 2013ம் ஆண்டு நடாத்துவதற்காக பிரேரிக் கப்பட்டுள்ளது. இலங்கையில் இம் மாநாட்டை நடாத்துவதற்கான ஒத்துழைப்பை இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் வழங்க முன்வந்துள்ளன.
பொதுநலவாய அமைப்பு மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்பு இலங்கைக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment