Sunday, October 30, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ரெலோ, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், நாளிதழ் என்பன பல்வேறு விதமான அபிப்பிராயங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன. கூட்டமைப்பு அங்கே தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தவேண்டும் என்று தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும், ஹிலாரியுடன் பேசுவதால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கமும் கருத்து வெளியிட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்கப் பயணத்தின் பின்னணி என்ன? அங்கு என்ன பேசப் படப்போகிறது? என்பவை பற்றியெல்லாம் கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினர் களுக்கே எதுவும் தெரியாது என்று கூட்ட மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரின் பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கூட்டமைப்பு தமக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறுமானால் அதற்கான பொறுப்பை விஜயத்தில் இடம்பெறும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுமே ஏற்கவேண்டும் என்றும் அது குறிப் பிட்டுள்ளது.
அமெரிக்காவின் அழைப்பு தமிழர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு அங்கீகாரம் என்றும், தமிழ்த் தேசத்தின் தனித்துவமான இறை மையை இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவேண்டும் எனவும் போர்க்குற்ற விசாரணைகளை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரி வித்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தினைச் சரியாகப் பயன்படுத்தி தமிழ் மக்கள் ஓர் தனித்துவ மான இறைமை கொண்ட இனம் என்பதனையும் தமிழர்களது சுயநிர்ணய உரிமை சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சுக்கள் நடைபெறவேண்டும் என்பதனை யும் அமெரிக்காவிடம் கூட்டமைப்பு வலியுறுத்தவேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரி வித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை என்று குற்றஞ்சாட்டியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், தமிழர் பிரச்சினையை அரசாங்கத்துடன் பேசியே தீர்க்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா. செயலாளருடனோ அல்லது ஹிலாரி கிளின்ரனுடனோ பேசுவதால் பிரச்சினை தீரப்போவதில்லை. ஐ. நா. செயலாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சந்திக்கவுள்ளமையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment