Saturday, October 15, 2011

தூத்துக்குடியிலிருந்து கொழும்பு செல்லும் பயணிகள் கப்பலில் போலி கடவுச்சீட்டு மூலம் கொழும்பு வர முற்பட்டவர் கைது!

Saturday, October 15, 2011
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்ற 40 வயதுடையவர் தற்போது மதுரை மாவட்டம் கே.புதூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் போலி கடவுச்சீட்டு மூலம் தூத்துக்குடியிலிருந்து கொழும்பு செல்லும் பயணிகள் கப்பலில் செல்ல முயற்சி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது கடவுச்சீட்டை சோதனை செய்த குடியுரிமை பிரிவு அதிகாரிகள், சந்தேகம் கொண்டு இணையதளம் மூலம் சோதனை செய்தனர். சோதனையில் கடவுச்சீட்டு போலி என்பது தெரியவந்தது.

விசாரணையில் முருகானந்தம், தனது சகோதரர் ஆறுமுகத்தின் ‌கடவுச்சீட்டில் புகைப்படத்தை மட்டும் மாற்றி இலங்கை செல்ல முயற்சி செய்ததும், இலங்கையிலிருந்து சவுதி அரேபியா செல்ல முயற்சி செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment