Saturday, October 15, 2011
போர்ட் மோர்ஸ்பி: பபுவா நியூகினியாவின் லே பகுதியில் இருந்து மடாங் பகுதிக்கு நேற்றுமுன்தினம் பிஎன்ஜி டேஷ் 8 விமானம் புறப்பட்டது. விமானத்தில் பயணிகள் உள்பட 32 பேர் இருந்தனர். மடாங் பகுதியை விமானம் நெருங்கிக் கொண்டிருந்த போது 20 கி.மீ. தொலைவில் தென் பசிபிக் கடல் பகுதியில் பயங்கர சூறாவளி வீசியது. அதன்பின், விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சில மணி நேரங்களுக்கு பின், மடாங் காட்டுப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டது. இதில் 28 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர்த் தப்பினர். அவர்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பைலட்டும் ஒருவர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் கூறுகையில், மடாங் பகுதியில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. அதில் பங்கேற் மாணவர்களின் பெற்றோர் லே பகுதியில் இருந்து மாடங்குக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பலியாகி விட்டனர். இந்த விபத்தில் ஆஸ்திரேலியர்கள் யாரும் இறக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் போலீசார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment