Saturday, October 15, 2011
வள்ளியூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வரும் எல்லா சாலைகளையும் அடைத்து போராட்டம் நடப்பதால், விஞ்ஞானிகள் பணிக்கு செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் தவிக்கின்றனர். நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால் பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை குவிக்க மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் டிசம்பரில் மின் உற்பத்தி தொடங்க உள்ள நிலையில், உள்ளூர் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அணுமின் நிலையத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்று போராட்ட குழுவினர் கூறி வருகின்றனர். ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையத்தால் தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு நீங்கும் என்று மத்திய அரசு கூறிவருகிறது. மக்களின் அச்சத்தை போக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் கூறினார். அதை போராட்ட குழுவினர் ஏற்கவில்லை. இடிந்தகரை லூர்து மாதா ஆலயம் முன்பு 2ம் கட்டமாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 9ம் தேதி தொடங்கினர். இன்று 7வது நாளாக 22 பெண்கள் உட்பட 106 பேர் உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
இந்நிலையில், அணுமின் நிலையத்துக்கு செல்லும் சாலைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 2வது நாளாக கன்னியாகுமரி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.எஸ்.புரம் விலக்கில் 30 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அணுமின் நிலையத்துக்குள் செல்ல விடாமல் இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகளையும் மக்கள் தடுத்து வருகின்றனர். இதனால் மின் உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகளை கவனிக்க முடியாமல் விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்.
அணுமின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 அணு உலைகள் ஓராண்டுக்கு முன்பே தயாராகி விட்டன. இதில் மின் உற்பத்திக்கான முக்கிய மூலப் பொருள் யுரேனியம் வைக்கப்பட்ட அறை முன்பு ராணுவம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 25 பேர் 24 மணி நேர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை மாற்ற மற்றொரு அணி வீரர்கள் ஷிப்ட் முறையில் வருவார்கள். ஆனால், உள்ளே இருப்பவர்கள் வெளியில் வர முடியாமலும், வெளியில் இருப்பவர்கள் உள்ளே செல்ல முடியாமலும் தடுக்கப்பட்டுள்ளதால் வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளத்துக்கு வரும் எல்லா சாலைகளிலும் இரவும், பகலுமாக கிராம மக்கள் மறியல் செய்வதால் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
பதற்றமான நிலையில் அணுமின் நிலையத்துக்குள் செல்ல முடியாமல் இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள் நூற்றுக்கணக்கானோர் Ôஅணு விஜய் டவுன்ஷிப்Õபில் தவிக்கின்றனர். போலீசாரும், Ôஅணுமின் உற்பத்தி கழக வாகனங்கள் எதுவும் அணுமின் நிலைய வளாகத்துக்குள் செல்ல வேண்டாம். பாதுகாப்பு பிரச்னை காரணமாக ஊழியர்களும் பணிக்கு செல்ல வேண்டாம்Õ என்று அறிவுறுத்தி உள்ளனர். இதனால் விஞ்ஞானிகள் இன்றும் குடியிருப்பு வளாகத்திலேயே முடங்கி கிடக்கின்றனர். எனவே, அணுமின் நிலைய வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
கலெக்டர் விஜயகுமார், தென் மண்டல ஐஜி ராஜேஷ்தாஸ், டிஐஜி வரதராஜு, நெல்லை எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, வள்ளியூர் ஏஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர். வரும் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் பெரும்பாலான போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அணுமின் நிலையத்துக்கு போதிய எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாத நிலை உள்ளது.
நிலைமை எல்லை மீறி செல்வதால், அணுமின் நிலைய பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் போலீசாரை குவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஓரிரு நாளில் இவர்கள் கூடங்குளத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னரே போராட்ட குழுவினருடன் மத்திய அரசு பிரதிநிதிகள் பேச்சு நடத்தி தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளதால் அங்கு முகாமிட்டுள்ள போலீசார் சாப்பாடு கிடைக்காமல் திணறினர்.
இயக்குனர் காசிநாத் உறுதி : உலகிலேயே மிக பாதுகாப்பானது!
கூடங்குளம் வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது; இயற்கை சீற்றங்களை தாங்கும் அளவுக்கு கூடங்குளம் அணு உலைகள் கட்டப்பட்டுள்ளன. நிலநடுக்க பகுதியில் இருந்து 1,350 கி.மீ. தள்ளி கூடங்குளம் உள்ளது. சுனாமி தாக்குதல் நடந்தால் கூட 8 அடி வரைதான் அலைகள் எழும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள அணு உலைகள் 23 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டீசல் ஜெனரேட்டர் அறை 27 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் பழுதடைந்தாலும் காற்று மூலம் அணு உலையை குளிர்விக்க வசதி உள்ளது.
இந்த வசதி உலகத்திலேயே முதன் முறையாக கூடங்குளத்தில் மட்டும்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணு உலையால் சுற்றுச்சூழல், மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கடல்வாழ் உயிரினங்கள், கடல் வளத்துக்கு எந்த தீங்கும் ஏற்படாது. மக்கள் வீணாக பீதியடைய தேவையில்லை. இவ்வாறு காசிநாத் கூறினார்.

No comments:
Post a Comment