Saturday, October 15, 2011
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதால், சென்னை உட்பட நாட்டின் முக்கிய மாநகரங்கள் அனைத்திலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய அரசு எச்சரித்துள்ளது. தீபாவளி கொண்டாடட்டத்தின்போது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி, பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியுள்ளன. தீவிரவாதிகளின் இந்த சதியை மத்திய உளவுத்துறைகள் 10 நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்து, அனைத்து மாநில அரசுகளையும் எச்சரித்தன. மேலும், டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான வெடிபொருட்கள் கடத்தி வரப்பட இருப்பதாகவும் தெரிவித்தன.
இந்த எச்சரிக்கை நேற்று முன்தினம் உண்மையானது. டெல்லியில் தாக்குதல் நடத்த 5 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், டெட்டனேட்டர்களுடன் காரில் வந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படைகளின் கண்காணிப் பால் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தின் வெளியே காரை நிறுத்தி விட்டு தப்பினர். அந்த காரை பாதுகாப்பு படைகள் கைப்பற்றி, டெல்லியில் நடத்தப்பட இருந்த மிகப்பெரிய தாக்குதலை முறியடித்தன.
இந்த நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் போது டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய மாநகரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைகள் மீண்டும் தகவல் அளித்துள்ளன.
அதன் அடிப்படையில், இந்த நகரங்களில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தும்படி அந்தந்த மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது.
பதற்றமான பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், மார்க்கெட், விமான நிலையம், பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் மற்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தும்படி மாநில டிஜிபிக்களுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது. இதையடுத்து, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.

No comments:
Post a Comment