Saturday, October 15, 2011

இலங்கைகான வியட்நாம் தூதுவராலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!

Saturday, October 15, 2011
இலங்கைகான வியட்நாம் தூதுவராலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வியட்னாம் ஜனாதிபதி ட்ரொன்;க் டென் சென்க் மற்றும் பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

கொழும்பு வோட் பிளேசில் வியட்நாம் தூதுவராலயம் இன்றே முதன்முறையாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் டி.எம்.ஜயரட்ன, தூதுவராலயத்தை ஸ்தாபித்ததன் ஊடாக இருநாடுகளிடையே சிறந்த உறவுமுறை தொடர்ந்தும் பேணப்படும் என குறிப்பிட்டார்.

அதேவேளை, இருநாடுகளுக்கிடையேயும், வான் சேவைகளை மேம்படுத்துவதற்கும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி கொழும்பு – உலக வர்த்தக மையத்தில் உள்ள மாணிக்கக் கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் கண்காட்சியொன்றை பார்வையிட்டுள்ளார்...

இலங்கை அரசாங்கத்திற்கும் வியட்நாம் அரசிற்கும் இடையில் பாதுகாப்பு: 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கை அரசாங்கத்திற்கும் வியட்நாம் அரசிற்கும் இடையில் பாதுகாப்பு, அரசியல், நிதி, கைத்தொழில், கல்வி, எரிபொருள் மற்றும் முதலீடு உள்ளிட்ட எட்டுத்துறைகளில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன என்று ஜனாதிபது செயலகம் அறிவித்துள்ளது.

எட்டு ஒப்பந்தங்களும் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வியட்நாம் ஜனாதிபதி ட்ரோங் டேன் சாங் ஆகியோர் முன்னிலையிலேயே நேற்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment