Friday, October 14, 2011
இன்று உலகந்தோறும் சனத்தொகைப் பெருக்கம் சம்பந்தமாக பேசப்பட்டு வருகிறது. இவ்வருட ஓக்டோபர் மாத இறுதி நாளில் ஏழு பில்லியன் உலக சனத்தொகை இருக்கும் என புள்ளிவிபரங்கள் எதிர்வுகூறுகின்றது. இது உலகில் கனிசமாக சனத்தொகை அதிகரிப்பைக் காட்டுகிறது. இலவச சுகாதாரம், மருத்துவம் மற்றும் கல்வி வசதி வாய்ப்புக்கள் அரசாங்களினால் மக்கள் நலனுக்காக அந்தந்த நாடுகளில் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் காலந்தோறும் இவைகள் இலவசமாக கிடைக்கும் என நாம் எண்ணிவிடக்கூடாது. குழந்தைகளைப் பெருவது ஒரு குடும்பத்தில் சந்தோசமான காரியம். இது அவர்களது உரிமையாகவும் இருக்கின்றது. இருப்பினும் அளவுக்கதிமான பிள்ளைகளை பெற்று விட்டு அவர்களை கவனியாது விடுவது பெற்றார்களின் தவறு. சிறுவர்கள் செய்கின்ற அனைத்து குற்றச் செயல்களுக்கும் பெற்றார்களே பொறுப்பானவர்கள் என்பதை அனைவர்களும் கவனத்திற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு அதிகாரி எம்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தினால் ஏழு பில்லியன் உலக சனத் தொகை பற்றிய பிரச்சார நிகழ்வு மட்டக்களப்பு பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற போதே அஸீஸ் மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதிகளான செல்வி லீனா மற்றும் காமினி இவர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்ந்த வைபவத்தில் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் சின்ன ஊறனி பிரதேச மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அதிகாரி அஸீஸ், இலங்கையின் மொத்த சனத் தொகையில் தற்போது 26 வீதம் இளைஞர்கள். அத்துடன் எமது பாராளுமன்றத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள் தற்போது பதிமூன்று பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலையை கருத்திற்கொள்வோமாகவிருந்தால் பெண்களின் சனத்தொகை அதிகரித்துள்ள போதிலும் அவர்களில் அரசியலில் ஆர்வமுள்ளவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். குடும்ப வன்முறைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற எத்தனையோ அப்பாவி பெண்களின் குரல்களை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வது யார்? பெண்களுக்கான சாதகமான சட்டங்களை இயற்றுவதற்கு பாராளுமன்றத்தில் பிரேரனைகளைக் கொண்டு செல்வது யார்? இதனை அனைவர்களும் சிந்திக்க வேண்டும்.
2015ம் ஆண்டின் போது இலங்கையின் சனத்தொகையில் இறுபது வீதமானவர்கள் முதியவர்கள் இருப்பர் எனவும் இவர்கள் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவே இருப்பர் எனவும் இன்னொரு புள்ளிவிபரம் கூறுகிறது. தெற்காசிய நாடுகளிடையே இலங்கையிலேயே அதிகுறைந்த மகப்பேற்று இறப்புக்கள் நிகழ்கின்றன. இதன் காரணமாக இலங்கை மக்களுக்கான அடிப்படை வசதிகள் அதிகமாக உள்ள நாடாக கணிக்கப்படுகின்றது. இந்த வகையில் நாம் பெருமிதம் அடைய வேண்டும் என மேலுமவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment