Friday, October 14, 2011

பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பில் இந்தியாவில் கைதானவர்களை அழைத்துவர நடவடிக்கை-கெஹெலிய ரம்புக்வெல்ல!

Friday, October 14, 2011
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறி இந்தியாவில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த விடயம் குறித்து தகவல் வெளியானது.

முக்கிய பிரமுகர்களுக்கு அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பிற்கு மேலதிகமாக பிரத்தியேக பாதுகாவலர்கள் வைத்துக்கொள்ளப்படுவது ஏன் என்று இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தங்களுக்கான பாதுகாப்பு போதாது என அவர்கள் நினைக்கின்றனா் என்று கூறினார்.

இதன்போது, அரசாங்கத்தில் ஆலோசகா்களாக பொறுப்பு வகிக்கின்ற இருவருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியதை அடுத்து அது பிழையான நோக்காகும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக ஒருவர் கடமையாற்றியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும் கண்காணிப்பு உறுப்பினர்கள் தொடர்பாக கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பிய சந்தா்ப்பத்தில் எந்தவொரு அமைச்சுக்கும் கண்காணிப்பு உறுப்பினர்கள் இல்லை என அமைச்சர் தினேஸ் குணவர்தன மிகத் தெளிவாக கூறியிருந்ததாக அமைச்சரிடம் வினவப்பட்டது.

இந்த விடயம் உண்மையானது எனினும், இந்த நியமனம் உத்தியோகப்பூர்வமானது அல்ல எனவும் அவா்களுக்கு சில பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் கூறினார்.

No comments:

Post a Comment